
பொதுவாகவே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தை அணுகுவோம். ஆனால் புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். பிறகு செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை உள்ளிட்டு, உங்கள் புகாரை பதிவு செய்யலாம். பிறகு உங்கள் புகார் மீதான விசாரணை நிலவரத்தை நீங்கள் ஆன்லைனில் அறிந்து கொள்ள முடியும்.