ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டோட 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்தது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களை துபாயில் நடத்த வேண்டும் என பிசிசிஐ ஐசிசிக்கு கோரிக்கை விடுத்தது.ஆனால் அந்த தொடரை நடத்த உரிமை பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் தயாராகுங்கள் பாகிஸ்தான்..! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பை சுற்றுப்பயணம் நவம்பர் 16ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. அந்த பயணம் ஸ்கார்டு, முர்ரி, ஹன்சா மற்றும் மசாபராபாத் இடங்களுக்கு செல்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஸ்கார்டு, முர்ரி, ஹன்சா ஆகிய பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த செயலை மேற்கொண்டது. இதனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் சா ஐசிசியின் உயர்மட்ட அதிகாரிய தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை கூறியுள்ளார். மேலும் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தை பொறுத்தவரை பிரச்சினை கிடையாது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கோப்பை சுற்றுப்பயணம் நடத்தக்கூடாது என கூறியுள்ளார்.