ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பீகாரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொருவரையும் சும்மா விடமாட்டோம். கண்டிப்பாக அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும். உலகின் எந்த மூலைக்கு அந்த தீவிரவாதிகள் சென்றாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கி தருவோம் என்று கூறினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை தற்போது பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி பீகாரில் சென்று உரையாற்றியதற்கு பதிலாக காஷ்மீர் சென்றிருக்க வேண்டும். விஷயம் முடிந்துவிட்டது. நம்பிக்கையை இழந்து இதை அனைவரும் கடந்து செல்வோம். அங்கு எதுவும் நடக்கவில்லை எனக்கூறி பிரதமர் மோடி உங்களை தூங்க வைப்பார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாஜகவில் இருந்தாலும் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Modi will do nothing. Instead of going to Bihar for speech he should have gone to Kashmir. We people now will lose hope and go home. Matter over. Modi will tell: Koi aaya nahin and put you to sleep

— Subramanian Swamy (@Swamy39) April 25, 2025