தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா வியாபாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி கஞ்சா வியாபாரம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் கஞ்சா வியாபாரம் தொடர்பாக ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. அப்போது கேசவபுரம் எனும் பகுதியில் அப்துல் என்னும் வாலிபர் கஞ்சா விற்று வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அப்துலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.  அவருடன் தொடர்பில் இருக்கும் கஞ்சா கும்பல் பற்றியும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.