கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய மூன்று பேரும் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

சிறுவர்களை காணாத பெற்றோர்கள் நேற்று இரவு வரை தேடிய போது கிணற்றின் அருகில் கிடைத்த உடைகளை கண்டு அவர்கள் தண்ணீரின் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நள்ளிரவு ஒரு மணி வரை கிணற்றில் இறங்கி தேடிய போது மூன்று சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.