
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல, அது அனைவரின் விளையாட்டு என்று இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ட்விட் செய்த நிலயில், சேவாக் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்..
19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இப்போது சீனியர் மகளிர் அணிகளின் டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 10 முதல் தொடங்க உள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை குறித்து பரபரப்பு அதிகரித்துள்ளது.ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பிப்ரவரி 12-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, டீம் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கிரிக்கெட் குறித்த தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல, அது அனைவரின் விளையாட்டு
ஹர்மன்ப்ரீத் கவுர் ட்விட்டரில், நான் ஜூலு டி (ஜூலன் கோஸ்வாமி), அஞ்சும் டி (அஞ்சும் சோப்ரா), டயானா மேம் ஆகியோரைப் பார்த்தபோது, சேவாக் சார், யுவி பா, விராட் மற்றும் ரெய்னா பா போன்ற அதே ஆர்வத்தையும் உணர்ச்சியையும் என்னுள் கொண்டு வந்தனர். நான் அவர்களின் வெற்றிகளை சமமாக கொண்டாடினேன், தோல்விகளில் சமமாக அழுதேன். என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல, அது அனைவரின் விளையாட்டு என்றார்.
நாங்கள் இருவரும் பந்து வீச்சாளர்களை அடித்து மகிழ்வோம் :
ஹர்மன்ப்ரீத்தின் இந்த ட்வீட்டிற்கு, சேவாக் நகைச்சுவையான முறையில் பதிலளித்தார். அதில், எனக்கும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் பொதுவான ஒன்று இருக்கிறது. நாங்கள் இருவரும் பந்து வீச்சாளர்களை அடித்து மகிழ்கிறோம். உலகக் கோப்பையின் பயணம் பிப்ரவரியில் தொடங்குகிறது, அக்டோபரில் அல்ல. உங்களுக்கு என் இனிய வாழ்த்துகள் என்றார்.
நடப்பு சாம்பியனாக ஆஸ்திரேலியா உள்ளது :
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, 2020ல் டீம் இந்தியாவை 99 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த முறை சரித்திரம் படைக்கும் வாய்ப்பை விட்டுவிட டீம் இந்தியா விரும்பவில்லை. இந்திய அணி இதுவரை 2016-ல் ஒரு முறை மட்டுமே பட்டத்தை வென்றுள்ளது.
Mere aur @imharmanpreet mai ek cheez common hai. Hum dono ko
Bowlers ki pitai karne mai mahut maza aata hai. World Cup ka safar October mai nahi, February mai shuru ho raha hai. Wishing you the best https://t.co/ByrRMSDkSe— Virender Sehwag (@virendersehwag) January 30, 2023