இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இவை சில நேரங்களில் உதவியாக இருந்தாலும் சிறிய தவறு ஏற்பட்டால் உங்களுக்கு சிக்கலாக மாறிவிடும். இதிலிருந்து தப்பிக்க நீங்கள் எப்போதும் கிரெடிட் கார்டு பேலன்ஸ் குறைவாக வைத்திருக்க வேண்டும். நிலுவைத் தொகையை தொடர்ந்து செலுத்துவதன் மூலமாக அதனை குறைக்கலாம்.

ஒவ்வொரு பில் மாதத்திற்கு முன்பாகவே தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தினால் உங்களுக்கான வட்டி குறையும். சில நேரங்களில் நாம் எந்த பெரிய பொருளை வாங்கினாலும் அதை கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்துகின்றோம். இதனால் அட்டைக்கு வசூலிக்கப்படும் மொத்த வட்டி மிக அதிகமாக இருக்கும். எனவே உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் இருந்து இஎம்ஐ வசதியை தேர்ந்தெடுப்பதன் மூலமாக அந்த கட்டணத்தை இஎம்ஐ ஆக மாற்றிக் கொள்ளலாம். இதனால் பொருள்கள் வாங்குவதற்கு விதிக்கப்படும் வட்டி குறையும்.