சென்னையில் உள்ள கிளாம்பாகத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும் பெருமளவில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன் \பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் தீபாவளி, பொங்கல் என்று அடுத்தடுத்து திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியான நிலையில் தற்போது புதிய திறப்பு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி 15-ஆம் தேதி கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று சிஎம்டிஏ தரப்பிலிருந்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.