
கீழடியில் இன்று காலை 9:30 மணிக்கு 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் மேடு உள்ளதாகவும் இதை முழுவதுமாக அகழாய்வு செய்து பண்டைய கால தமிழர்களின் வாழ்வியலை வெளி கொண்டுவரவும் தொல்லியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜனவரியில் தொடங்க வேண்டிய அகழாய்வு பணிகள் கீழடி அருங்காட்சியக பணியின் காரணத்தால் இன்று தொடங்குகிறது.