குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவின் கரேலி பார்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று அதிவேகமாக ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அம்பரபாலி வளாகத்திற்கு அருகே கார் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்துள்ளது. இதனால் கார்  சாலையில் பைக்கில் வந்த பெண் ஒருவரை இடித்து தூக்கி வீசியது. மேலும் சாலையில் நின்ற ஐந்து பேருக்கு பலத்த படுகாயம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பைக் வாகனங்களும் சேதம் அடைந்தன.

இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அந்த ஓட்டுனரை காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளனர். காரினுள் இரு இளைஞர்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் காரில் பயணித்த நபர் காரை விட்டு வெளியே இறங்கியுள்ளார் அதன் பின் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் காரை விட்டு இறங்கி குடிபோதையில்”இன்னொரு ரவுண்ட், இன்னொரு ரவுண்ட் நிகிதா, நிகிதா ஓம் நமச்சிவாய” என கத்தி கூச்சலிட்டார். அவரது செயல் அருகில் இருந்தவர்களை மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவருடன் இருந்த மற்றொருவர் தப்பி ஓடியதால் அவரைத் தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்து ஏற்படுத்திய கார் டியான் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் கண்டறிந்தனர்.

விபத்து ஏற்படுத்திய இளைஞர் எம்.எஸ் பல்கலைக்கழக சட்டமானவர் ரஷீத் ரவிஸ் சௌவுராசியா என்பவர் என தெரியவந்துள்ளது. இவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள அனைவரின் மீதும் இடித்து விபத்துக்குள்ளாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ரங்கோத்சவு நிகழ்ச்சி அப்பகுதியில் ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.