
மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கனிமொழி (30) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 2 மகன்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்திக்குக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அதோடு அவரை அடித்து துன்புறுத்தியதோடு குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதேபோன்று சம்பவ நாளிலும் கார்த்திக் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தினார். இதனால் ஆத்திரத்தில் கனிமொழி வீட்டில் இருந்த தோசை கல் மற்றும் சப்பாத்தி கட்டையால் தன்னுடைய கணவரை தாக்கினார். அதன் பின் அரிவாள் மனையால் அவரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதுகுறித்த தகவலின் பேரில் கீரைத்துரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் கனிமொழியை அவர்கள் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.