
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு பறந்துள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் 3 பிராண்ட் சரக்குகளை விற்பனை செய்ய வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி Troficana VSOP Brandy, old secret brandy, veeran special brandy ஆகிய 3 சரக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியதோடு கடைகளில் இருப்பு இருப்பின் மீண்டும் மதுபான குடோன்களுக்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது மதுபானங்களில் சில குறிப்பிட்ட அளவு வரையறை உள்ள ஆல்கஹால் மட்டும்தான் விற்பனை செய்யப்பட வேண்டும். அதாவது சராசரியாக குறிப்பிடப்பட்ட மதுபானங்களில் ஆல்கஹால் அளவு 48.2% ஆகவும், கலவையில் 50 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில மதுபான வகைகளில் வரையறுக்கப்பட்ட அளவைவிட ஆல்கஹால் குறைவாகவும் சிலவற்றில் அதிகமாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அந்த 3 வகை சரக்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.