
மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விநாயகன் ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் மதுபோதையில் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு ஆபாசமாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக புகார் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே தனது இத்தகைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு விநாயகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தனிநபராக தான் பல பிரச்சனைகளில் போராடுவதாகவும் அதனை தன்னால் கையால முடியவில்லை என்றும் அதோடு தன் தரப்பிலிருந்து வந்த எதிர்மறை செயல்களுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் விநாயகன் குறிப்பிட்டிருந்தார்.