கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து திமுக அரசை கண்டித்து பாஜக கட்சியினர் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்பொழுது அவர்கள் டாஸ்மாக் மதுவை வாங்கி கழிவுநீர் வாய்க்கால்களில் கொட்டி மதுவை கைவிடுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் மதுபிரியர் ஒருவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பாஜக கட்சியினர் மதுவை வரிசையாக நின்று ஊற்றிய பொழுது இதைக்கண்டு ஆதங்கம் அடைந்த மதுப்பொரியர் ஒருவர் காசு கொடுத்து வாங்கி மதுவை இப்படி ஊற்றுகிறீர்கள் அதை என்னிடம் கொடுங்கள் என்பது என்று  கேட்டுள்ளார். ஆனால் இதை பொருட்படுத்தாத அவர்கள் ஊற்றிக் கொண்டே இருந்தார்கள். பின்னர் ஒரு வழியாக அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு அந்த இடத்திலிருந்து நடந்து சென்றார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது