
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை ஏழு சீசன்கள் நிறைவு பெற்றுள்ளது. ஏழு சீசங்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சீரியல் நடிகை அர்ச்சனா.
ஏழாவது சீசனில் பல போராட்டங்களுக்கு மத்தியில் டைட்டில் வின்னராக 19 கோடி மக்களால் வாக்களிக்கப்பட்ட இவர் தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா தற்போது என்ன செய்கின்றார் என்ற விவரங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அதன்படி குடும்பத்தினருடன் சென்று அர்ச்சனா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அர்ச்சனாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க