தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகள் பதிவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போது சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததோடு அதற்காக 247 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிப்பதற்காகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்க தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ரூ.2919.75-ஐ ஆதாய விலையாக நிர்ணயித்துள்ளது. இதனுடன் 215 ரூபாயை சிறப்பு ஊக்கத்தொகையாக மாநில அரசு நிர்ணயத்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக ஒரு டன்னுக்கு விவசாயிகளுக்கு ரூ.3134.75 வழங்கப்படும். மேலும் 2023-24 ஆம் ஆண்ட சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரம் முறையாக சேகரிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான குழு பரிந்துரையின்படி தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.20 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.