தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பூண்டு விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிலோ 400 ரூபாய் வரையில் விற்பனையானது. அதாவது வரத்து குறைவின் காரணமாக பூண்டு விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்து உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது பூண்டின் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பூண்டு 125 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் தற்போது விற்பனையாகிறது. மேலும் பூண்டின் விலை தற்போது குறைந்துள்ளது இல்லதரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.