
ஆவின் நிறுவனம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கூறிருப்பதாவது, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பொதுமக்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் விசேஷ நாட்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை குறைப்பது வழக்கம். அந்த வகையில் வருகிற 26 ம் தேதி அதாவது கிருஷ்ண ஜெயந்தி மற்றும் செப்டம்பர் 7 ம் தேதி விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்கள் வருகிறது. அதனால் நெய்யின் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 85 ரூபாய்க்கு விற்கப்படும் 100 மிலி 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி வருகிற செப்டம்பர் 15 ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.