
தமிழகத்தில் வாகனங்களுக்கான பரமிட் 2 நாளில் பெரும் விதமாக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது தற்போது வாகனங்களுக்கு பர்மிட் வாங்குவதற்கு குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை ஆகின்றது. இதனை சுருக்கி 2 நாட்களில் அனுமதி பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆட்டோ, கால் டாக்ஸி, மினி வேன் மற்றும் பஸ் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கான ஆவணங்களை tnsta.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பதிந்து வாங்கிக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் அதோடு வாகனங்களுக்கு 2 நாட்களில் பர்மிட் பெரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.