தமிழக முழுவதும் 18 .50 லட்சம் அரச பள்ளி மாணவர்கள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதனை இன்று தொடங்கி வைத்திருக்கிறார். மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜ் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த நாளில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் தொடக்க விழா நடக்க இருக்கிறது. இதில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த திட்டத்தின் மூலமாக  2.20 லட்சம் மாணவர்கள் பயன் பெற உள்ளார்கள்.