குப்பைகளை அகற்றும் படி எக்ஸ் தளத்தில் நபர் ஒருவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக தென் சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது செங்கல்பட்டை சேர்ந்த நபர் ஒருவர் சித்தாலப்பாக்கம் என்ற பகுதியில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அதை அகற்றும்படி எக்ஸ் தளத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை அடுத்து இதனை பார்த்த தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் குப்பைகளை கொட்டுவதை தடுக்க அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.