கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க முடிவு செய்து கிளம்பிய நிலையில் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட பகுதியாக கருதப்படும் மரண பாறை என்ற இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுடன் சென்ற விஜய் என்ற 27 வயது வாலிபர் கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். அதாவது பாறையின் மீது ஏறி நின்று அவர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கால்தவறி கடலுக்குள் விழுந்து விட்டார்.

அவரைக் காப்பாற்ற அங்கிருந்தவர்கள் முயற்சி செய்த போதிலும் அவர் அலையில் சிக்கி மாயமானார். இது தொடர்பாக கடலோர குழும பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக மீனவர்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று டவர் அருகே விஜயின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.