
யூபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் முறையானது இந்தியாவில் 2016 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த முறையானது அறிமுகமான சில வருடங்களிலேயே டிஜிட்டல் துறையில் பெரிய அளவில் புரட்சி ஏற்படுத்தியது. இதன் மூலமாக சிறிய முதல் பெரிய அளவிலான தொகை எளிதாக எங்கிருந்தாலும் பரிமாற்றம் செய்ய முடியும். இதனால் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் யூபிஐ-க்கான அடுத்த பெரிய அம்சமாக கிரெடிட் லைன் வசதியின் ஒருங்கிணைப்பு அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை கிரெடிட் கார்டுகளை போல இல்லாமல் தினசரி செலவுகளுக்கு குறுகிய காலங்களை குறைந்த பட்டியலில் வழங்குகிறது. இதில் லட்சக்கணக்கான இந்தியர்கள் முறையான கடன் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படும் என்றும் வெளிப்படையான பரிவர்த்தனைகளை இதன் மூலமாக பாரம்பரிய கடன் மாதிரிகளுக்கு ஒரு நம்பிக்கை கூறிய மாற்றாக அமையக்கூடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.