
மத்திய அரசானது ஏழை எளிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு எந்தவித ஈடும் இன்றி 33 லட்சம் வரை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்த அவர், பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு முதலில் ச1 லட்சம் கடன் வழங்கப்படும், அதனை முறையாக திருப்பி செலுத்தியவுடன் மேலும் 2 லட்சம் வரை கடன் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.