குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்கள் மீதான  தவறை மறைப்பதற்காக அதிமுக மீது பழி போடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது.  இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார்கள். இதனால் புகைமூட்டம் சூழ அப்போதுதான் பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல் தடுத்துள்ளனர்.

ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள அரிசி கடை மீதும் அவர்கள்  பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளார்கள். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு ஏழு தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலியல் வன்கொடுமை, வன்முறை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களையும் ஈடுபட்டு வருபவர்கள் தான் ஆளும் திமுகவினர் என்பது சமீபத்தில் வெளிவரும் செய்திகள் மூலமாக வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்கள் மீதான  தவறை மறைப்பதற்காக அதிமுக மீது பழி போடுகிறார்கள். இது வாடிக்கையாகிவிட்டது என்று பேசியுள்ளார்.