
டெலிகிராம் தடை: பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு ஆதாரமாக பயன்படுவதாகக் கூறப்படும் டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயலி, குறிப்பாக குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுவதாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விதிகளுக்கு ஒத்துழைக்காதது மற்றும் பல குற்ற நடவடிக்கைகளை அனுமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவில் டெலிகிராம் செயலியை தடை செய்வதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த நடவடிக்கை மில்லியன் கணக்கான பயனாளர்களை பாதிக்கும் என்பதால், அரசு இது கவனமாக தான் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.