
உத்தர் பிரதேஷ் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மகி. இவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது கழிவறையில் இருந்து வெளியான வாயுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு உள்ளார். மகியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தவர் திரும்பி வந்து பார்த்தபோது சுயநினைவின்றி கிடந்த மகளைப் பார்த்து அதிர்ச்சடைந்துள்ளார்.
பின்னர் மகியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மகிக்கு இதற்கு முன்பும் இது போன்ற மூச்சு திணறல் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் அவர் குளிக்க செல்லும் போது வெளியில் இருந்து பாத்ரூமில் லாக் செய்வதை குடும்பத்தினர் வழக்கமாக வைத்திருந்ததாக மகியின் சகோதரர் மாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.