
சென்னையை எடுத்த கீழக்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிதிஷ் (19) மற்றும் அஜய் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதாவது சிறுமி வீட்டில் குளிக்கும் போது அவர்கள் இருவரும் அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி மாணவியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.