டெக்டோனிக் பிளேட் நகர்வால் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கியுள்ளது. அதனுடைய சில பகுதிகள் தென் தமிழகத்துடன் மோதி புதிய மலைகள் உருவாகி கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இமயமலை போன்ற குளிர் பிரதேசங்களாக மாறும் என்று கருத்து பரவி வந்தது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள புவிசார் துறை செயலாளர், இந்த நிகழ்வு நடப்பதற்கு இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும். இது சில நூறு ஆண்டுகள் மற்றும் ஆயிரம் ஆண்டுகளிலோ நடக்கக்கூடிய விஷயம் அல்ல. எனவே இது குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளார்.