திருப்பூர் மாவட்டத்தில் மலையயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி வேர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்த வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மலையப்பனுக்கு மாரடைப்பு வந்தது. அவருக்கு கடுமையான நெஞ்சுவலி வந்தபோதிலும் குழந்தைகளின் உயிரை கருத்தில் கொண்டு வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். அதன் பின் சில நொடிகளில் அவர் ஸ்டியரிங் மீது சாய்ந்து மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்நிலையில் தன்னுயிர் பிரியும் நேரத்தில் மற்றவர்களின் உயிரை காப்பதற்காக போராடிய ஓட்டுனரின் செயல் மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது. அவருடைய மனிதநேயமிக்க செயலால் என்றும் புகழுருவில் வாழ்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி உயிரிழந்த மலையப்பன் குடும்பத்தினருக்கு ‌ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.