இன்றைய காலகட்டத்தில் கல்லீரல் அலர்ஜி நோய் என்பது மிகவும் பரவிக் கொண்டே வருகிறது. இந்த  நோயால் வருடத்திற்கு 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.  இந்த நோயில் பல வகைகள் இருக்கின்றன. அதாவது ஹைபடடிஸ் ஏ,பி, சி ,டி ,இ என 5 வகைகள் உள்ளது. அதில் பி மற்றும் சி அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்தது. அதன்படி உலக அளவில் ஹைபடடிஸ் பி மற்றும் சி யால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹைபடடிஸ் பி க்கு மட்டும் தடுப்பூசி உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து உலக கல்லீரல் அலர்ஜி தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்  மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் உலக கல்லீரல் அலர்ஜி நோய் என்பது உயிரைக் கொல்லும் நோயாக இருந்து வருகிறது. இதற்காக அனைவருக்கும் ஹைபடடிஸ் பி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு பிறந்த குழந்தைகளுக்கும் 24 மணி நேரத்திற்குள் இந்த தடுப்பூசி அரசு சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது என்றும் இந்த அலர்ஜி நோயின் முக்கிய அறிகுறியாக மஞ்சள் காமாலை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.