இன்றைய காலகட்டத்தில் இந்திய அஞ்சல் துறை திட்டங்களில் மக்கள் அனைவரும் அதிக அளவு கணக்குகளை தொடங்க விரும்புகின்றனர். பெண் குழந்தைகளுக்கு பயனளிக்கும் விதமாக செல்வமகள் சேமிப்பு திட்டமும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இரண்டு திட்டங்களுக்கும் சேமிப்பு கணக்குகளை தொடங்க சென்னை பொது அஞ்சலகத்தில் நவம்பர் 13 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 16 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய குழந்தைகளின் பெயரில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.