
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அதில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியமூட்டுவதாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வியக்கத்தக்க ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது பலரும் செல்லப் பிராணிகளை விரும்பி வளர்க்கும் நிலையில் அதற்கு பெயர் வைத்து வளர்ப்பார்கள். அந்த வகையில் புனேவில் உள்ள நரியால் அழகு சாதன நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு பூனைக்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறார்கள்.
அவர்கள் இந்த பூனை குட்டிக்கு பெயர் சூட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி பெயர் சூட்டம் விழாவுக்கு ஏற்பாடு செய்து வெகு விமர்சையாக விழாவை நடத்தி முடித்தனர். அதன்படி முதலில் பூனைக்குட்டியை அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டனர். பின்னர் பூக்களால் பூனை குட்டியை வரவேற்ற நிலையில் கேக் வெட்டி விழாவை சிறப்பித்தனர். அந்தப் பூனை குட்டிக்கு அவர்கள் கோகாயா என்று பெயர் சூட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram