கொல்கத்தாவின் தில்ஜாலா பகுதியில் 7 வயது பக்கத்து வீட்டு சிறுமியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஒரு மந்திரவாதியின் ஆலோசனையின் பேரில் இதை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அலோக்குமாருக்கு குழந்தை இல்லாததால் தனது குழந்தை ஆசையை நிறைவேற்ற சில மாதங்களுக்கு முன்பே பீகாரில் உள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளார். அப்போது அந்த மந்திரவாதி குழந்தை பிறக்க வேண்டும் என்றால் நவராத்திரிக்குள் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அலோக் குமார் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று தனது குடியிருப்புக்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பக்கத்து வீட்டு குடியிருப்பில் இருந்து சாக்கு மூட்டைக்குள் அவரது உடல் அடைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. சிறுமியின் தலையில் சுத்தியால் அடிக்கப்பட்டதால் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் சிறுமியின் பிறப்புறுப்பிலும் காயங்கள் இருந்தன. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மந்திரவாதியை போலீசார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.