சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடமாக கலையரசரை பிரிந்து அவருடைய மனைவி வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தை இல்லாததால் கதிர்வேல் மிகவும் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தன்னுடைய வயிற்றை பிளேடால் கிழித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.