
மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை ருமேஜா. ருமேஜாவின் தாய் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தனர்.
அப்போது இரவு 11 மணி அளவில் ரூமேஜா தனது தாய் மாமா பராஸ் என்பவருடன் விளையாடுவதற்காக சென்றார். அந்த சமயத்தில் சகஜமாக பேசிக் கொண்டிருந்த குடும்பத்தினர் பராஸிடம் உருப்படியாக வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து இதேபோன்று குடும்பத்தினர் கூறிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பராஸ் தான் இப்போது ஒரு வேலை செய்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று கத்தியை எடுத்து வந்தார். குடும்பத்தினரோ ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க தனது அருகே நின்ற மூன்று வயது குழந்தை ருமேஜாவை கழுத்தை அறுத்து போட்டார்.
இதுகுறித்து குழந்தையின் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்தவர் ருமேஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பராஸை வீட்டில் வைத்து பூட்டிய குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.