
நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் வாயிலாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் “டோரன்ட் கியாஸ்” நிறுவனமானது குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சென்னையிலுள்ள சாலைகள், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றிடம் உள்ளதால் இத்திட்டத்துக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கியாஸ் குழாய் புதை வடம், மற்ற நிறுவனங்களின் கேபிள்களுக்கும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் போன்றவற்றுக்கும் பாதிப்பு ஏற்படாத அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். கல்வெட்டுகள், பாலங்கள், போக்குவரத்து போன்றவை பாதிக்கப்படகூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.