குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்ததாக வந்த செய்தியை கேட்டு மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன்.

இதில் உயிரிழந்தவர்களின் அனைவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை செய்ய அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் காயம் அடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.