குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நேற்று அதிகாலை ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுத்த குடியிருப்புகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 49 இந்தியர்கள் பலியான நிலையில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி 2 தமிழர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 3 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் தீ விபத்தில் பலியாகியுள்ளனர்.