
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என கூறி அரசு அதற்கான அட்டவணையை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் இன்னும் 11 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் ஒன்பது நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதாக மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதனைப் போலவே ஆகஸ்ட் 3, 17, 31 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை விடுமுறை. இதனைத் தவிர ஆகஸ்ட் 15 சுதந்திர தினமாகும். ஆகஸ்ட் 26 கோகுலாஷ்டமி என இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறை. இதனால் ஆகஸ்ட் மாதம் மொத்தம் 22 நாட்கள் பள்ளிகள் செயல்படும் எனவும் 9 நாட்கள் விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.