இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசு வழங்குவது மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் உப்பு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ரேஷன் பொருளுடன் மாதம்தோறும் ஒரு கிலோ உப்பு 8 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரேஷன் அட்டைதாரர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளவும் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.