
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடக்கிறது. இந்நிலையில் அப்போது கோடை வெயிலின் தாக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு விடுமுறை வழங்கி உள்ளது. மேலும் இதன் காரணமாக ஜூலை 2-ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.