
தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் வீட்டில் மக்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இந்நிலையில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. இதைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை உழவர் திருநாள் ஆகியவற்றை தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் வேலை நாளாக இருக்கும் நிலையில் அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டால் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வரும் என்பதால் அந்த அறிவிப்புக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சனி ஞாயிறு விடுமுறை வரும் நிலையில் திங்கட்கிழமை போகி பண்டிகை. அன்றைய தினம் வேலை நாள். ஒருவேளை திங்கள் கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டால் பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.