தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில் 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகிறது. மத்திய அரசு ஜன் அவ்ஷாதி என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறது. இந்த மருந்தகங்களை தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 20 தொடங்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக இடவசதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.