தமிழகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் பின்னர் சனி ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை. அதன் பிறகு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திங்கட்கிழமையும் விடுமுறை.

இந்நிலையில் தற்போது இந்த வாரமும் வெள்ளிக்கிழமை முதல் சனி ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது வெள்ளிக்கிழமை வருகிற 18-ஆம் தேதி புனித வெள்ளி. இதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதேபோன்று சனி ஞாயிறு பொது விடுமுறை. மேலும் இதன் காரணமாக தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வந்துள்ளது.