தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பல சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஒரு அட்டவணையும் வெளியிட்டு இருந்தது.

அதில் வருகின்ற சனிக்கிழமை பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 3, 4(சனி, ஞாயிறு), ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் பொது விடுமுறை, ஆகஸ்ட் 17 மற்றும் 18 சனி ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி பொது விடுமுறை, ஆகஸ்ட் 31 சனி என ஒன்பது நாட்கள் இந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருகிறது.