
நாடு முழுவதும் பல்வேறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயில்களில் அவ்வப்போது புது புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வந்தே பாரத் நாற்காலி ரயில்களின் தொடர்ச்சியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் அடுத்த இரண்டு மாதத்தில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்காக ரயில்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது முதலில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.