மழைக்காலத்தில் பயணம் செய்யும்பொழுது கூகுள் மேப்பை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரளா காவல்துறை, மோட்டார் வாகன துறையினரும் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கூகுள் மேப்பால் வழிதவறி சென்றதில் கடந்த வருடம் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசர காலத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையை 112 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம். மேப்பில் பொருத்தமான பயணமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கான வழிகள் நான்கு சக்கர வாகனங்களில் இருந்து வேறுபடலாம் என்பதை வாகன ஓட்டிகள் நினைவில் கொள்ள வேண்டும்.