
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக் கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை நிர்ணயித்து, அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் உத்தரவு பிறப்பிக்கட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 24ஆம் தேதி இந்த ஆண்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அக்டோபர் 15ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு ஆட்சேபனை பள்ளிகளில் இருந்து பெறலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு முரணாக ஜனவரி 23ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னையை சேர்ந்த பள்ளி என 2 பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில், ஐகோர்ட்டில் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றவில்லை, பள்ளி ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் தரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குறிப்பாக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மீறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு குழுமத்தில் உள்ள பள்ளிஆசிரியர்களை அதே குழுமத்திற்கு தான் மாற்ற வேண்டும். மற்ற குழுமத்திற்கு மாற்றக்கூடாது என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.. தங்களது ஆட்சேபனையை கேட்காமல் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் ஆரம்ப கட்ட விவாதம் இருப்பதாக கூறி அரசாணைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு அரசு தரப்பில் அளிக்கப்படும் விளக்கத்தை பொறுத்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு அடுத்த கட்ட நகர்வை சந்திக்கும்..