கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் திமுகவுக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. ஆம்! கடந்த முறை கொ.ம.தே.கவுக்கு ஒதுக்கப்பட்ட நாமக்கல், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை, காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி மக்களவை தொகுதிகளில் திமுகவே நேரடியாக களமிறங்க வேண்டும் என திமுகவினர் தலைமையிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால், திமுக தலைமை குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது